மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பசியால் தவித்த குரங்குகளுக்கு தேடிசென்று உணவளித்த பிரபல நடிகர்! கற்றுக்கொண்ட பாடம்! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவிய நிலையில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிக்பள்ளாப்பூர் அருகே அமைந்துள்ளது நந்திமலை. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு அங்கு சுற்றுலா வருபவர்கள், அங்கு வாழ்ந்துவரும் ஏராளமான குரங்குகளுக்கு உணவு வழங்குவர்.ஆனால் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நந்திமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நந்திமலையில் உள்ள குரங்குகள் உணவுகள் கிடைக்காமல் தவித்து வந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அறிந்த கன்னட நடிகர் சந்தன்குமார். நந்தி மலைப்பகுதிக்கு சென்று அங்கு 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு பழங்களை வழங்கினார். அப்பொழுது அந்த குரங்குகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டுள்ளது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நடிகர் சந்தன்குமார், பாடம் கற்றுக்கொண்டேன். சமூக விலகல், நாம் எப்போது இந்த சமூக விலகலை கற்றுக்கொள்ள போகிறோம்? 500 குரங்குகளுக்கு உணவளிப்பது, மக்கள் கூட்டமாக வருவதை சமாளிப்பதை விட மிக எளிதானது என பதிவிட்டுள்ளார்.