மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல முன்னணி அம்மா நடிகை மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
கன்னட திரைப்படங்களில் பெரும்பாலும் அம்மா வேடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கிஷோரி பல்லான். 82 வயது நிறைந்த அவர் பெங்களூரில் வசித்து வந்தார். இவர் கன்னட திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கிஷோரி பல்லால் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஸ்வதீஸ் என்ற திரைப்படத்தில் அவரது அம்மாவாக நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சினிமாக்களில் நடித்துவந்த அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கிஷோரி பல்லால் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து பிரபல பழம்பெரும் நடிகையான கிஷோரியின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.