மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கன்னட சினிமாவில் ரிஷப் ஷெட்டி இயக்கி, தயாரிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் முதல் பாகம் வெளியாகும் போது இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து காந்தாரா 2 படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்திற்கு காந்தாரா சாப்டர் 1 என பெயர் வைத்துள்ளனர்.