மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியில் கரண் ஜோகர் இயக்கவிருக்கும் "பரியேறும் பெருமாள்".. அதிர்ச்சியில் தமிழ் ரசிகர்கள்.!
கோலிவுட் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளிவந்த அழுத்தமான கதைகளம் கொண்ட திரைப்படம் "பரியேறும் பெருமாள்". கதிர் மற்றும் 'கயல்' ஆனந்தி கதாநாயகன், நாயகியாக நடித்த இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கிய இத்திரைப்படம், தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதாகவும், பிரபல இயக்குநரும் , தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் இத்திரைப்படத்தை ஹிந்தியில் தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் கதாநாயகன், நாயகியாக தமிழில் கதிர் மற்றும் ஆனந்தி நடித்த கதாபாத்திரங்களில் ஹிந்தியில் நடிகர் சித்தார்த் சதுர்வேதியும், நடிகை திருப்தி திம்ரியும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலைக் கேள்விப்பட்ட நெட்டிசன்கள், "தயவுசெய்து இந்த நல்ல திரைப்படத்தை விட்டு விடுங்கள்" என்று சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.