மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. இவரா! பிரபாஸ்க்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் முன்னணி நடிகை! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி சூப்பர்ஹிட்டான பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். மேலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.
இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் கைவசம் தற்போது அடுத்தடுத்ததாக
ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற பிரம்மாண்ட படங்கள் உள்ளன. மேலும் அவர் அண்மையில் தனது 25வது படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். அப்படத்தை அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 8 மொழிகளில் தயாராகவிருக்கும் இப்படத்திற்கு 'ஸ்பிரிட்’ என பெயரிடப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கப்போவது யார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது அதுகுறித்த தகவல்கள் பரவி வருகிறது. அதாவது அப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பிரபல முன்னணி பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.