மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதெல்லாம் ஒரு பொழப்பா? பிரபல தொலைக்காட்சியை மோசமாக வச்சு செய்த நடிகை கஸ்தூரி!! ஏன் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3. இந்நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.
மேலும் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், முகேன் பிக்பாஸ் பட்டத்தை தட்டிச்சென்றார். மேலும் சாண்டி இரண்டாவது இடத்தையும், லாஸ்லியா மற்றும் ஷெரின் மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் வென்றனர்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையிலும் கவின், சாண்டி, முகேன் மற்றும் தர் தர்ஷன் ஆகியோர் ஒன்றாக நேரம் செலவிட்டு வந்தனர். மேலும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றிலும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். அப்பொழுது அந்த நால்வரும் வனிதா, கஸ்தூரி, மீரா என பலரையும் கலாய்த்து பேசியிருந்தனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த 4 பேரையும், டிவி சானலையும் மோசமாக திட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
In very very bad taste. In promoting its favorites, @vijaytelevision has ended up promoting toxic fake masculinity. நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? You owe it our youngsters to set better standards. #BiggBossTamil @ikamalhaasan https://t.co/UmLZv41wqA
— Kasturi Shankar (@KasthuriShankar) October 14, 2019