மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது!! ராஜா ராணி2-வில் இனி இந்த காதல் ஜோடிகளா!! ரசிகர்களை குஷியாக்கிய சூப்பரான தகவல் இதோ!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இந்த தொடரின் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். கார்த்திக், செண்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் ஏராளமான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தனர்.
மேலும் சீரியலில் காதல் ஜோடியாக நடிக்கதுவங்கிய அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒருவருக்கு ஒருவர் காதலிக்க துவங்கி சமீபத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். மேலும் அண்மையில் அவர்கள் இருவருக்கும் கோலாகலமாக திருமண வரவேற்பும் நடைபெற்றது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்த ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் மீண்டும் தொடங்க இருப்பதாக அத்தொடரின் இயக்குனர் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி அளிக்கையில் லாஸ்லியாவிற்கு வாய்ப்பு வழங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் லாஸ்லியா தான் கதாநாயகியாக நடிப்பார் என செய்திகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து தற்போது அத்தொடரில் கவினும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதனால் பிக்பாஸ் வீட்டில் நெருங்கிப் பழகிய அந்த ஜோடி மீண்டும் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடிப்பதன் மூலம் ஜோடி சேர உள்ளனர் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.