மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. சர்வைவர் நிகழ்ச்சியில் இவ்வளவு கஷ்டப்பட்டுள்ளாரா! காயத்ரி ரெட்டி சொன்ன அதிர்ச்சி உண்மைகள்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி ரெட்டி கடந்த வாரம் வெளியேறினார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே சில டாஸ்குகளில் மட்டுமே வெற்றி பெற்ற காயத்ரி மூன்றாம் உலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு 40 நாட்களுக்கு மேல் தங்கிய அவர் அம்ஜத்கானிடம் தோல்வியடைந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் அவர் சர்வைவர் குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சர்வைவர் தீவில் இருக்கும்போது அங்கிருந்து எப்போது வெளியேறுவோம் என தோன்றியது. ஆனால் தற்போது அதனை மிஸ் செய்கிறேன். மூன்றாம் உலகத்தில் வாழ்வது ரொம்ப கொடுமையானது. அங்கு சாப்பிட எதுவுமே கிடைக்காது. தூங்குவது கூட ரொம்ப கஷ்டம்.
அங்கு இரண்டு நாட்களுக்கு மேல் பட்டினியாக இருந்தேன். பிறர் சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்த உணவை சாப்பிட்டேன். இரவு நேரங்களில் ரொம்ப குளிரும். போர்வை கூட இருக்காது. மூன்றாம் உலகம் கிட்டத்தட்ட நரகத்தை போல் இருந்தது. ஆனால் இனி என் வாழ்க்கையில் எந்த கஷ்டம் வந்தாலும், எனக்கென எதுவுமே இல்லை என்ற நிலைமை வந்தாலும் அதிலிருந்து மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கை சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.