மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி மிஸ் பண்ணீட்டிங்களே... அண்ணாத்த படத்திற்காக சூப்பர் ஹிட் படவாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்...
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம்வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் தங்கையாக நடித்தது பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது.
கீர்த்தி அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக இரண்டு சூப்பர் ஹிட் படவாய்ப்புகளை தவற விட்டுள்ளார். அவை மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை தான் முதலில் கீர்த்தி நிராகரித்து இருக்கிறார். இரண்டாவது தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நடிக்க கீர்த்தியிடம் கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் ரஜினி படத்திற்காக அதை நிராகரித்துவிட்டாராம் கீர்த்தி. அதன் பின் சாய் பல்லவி அந்த படத்தில் நடித்து இப்போது பாராட்டுகளை பெற்று வருகிறார்.மேலும் அப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.