மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹாலிவுட்டில் கதாநாயகியாக போகிறாரா கீர்த்தி சுரேஷ்.. வைரலான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பல வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷை பற்றிய சர்ச்சை, வதந்திகளுக்கும் குறைவே இல்லை.
மேலும் தற்போது தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' திரைப்படம் இந்தியில் அட்லீ இயக்கத்தில் வருண் தவான் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அட்லி பாலிவுட்டில் இயக்கும் இரண்டாவது படம் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்து வந்தாலும் சமூக வலைதளங்களில் போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் ஹாலிவுட்டிலும் நடிக்க போகிறாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.