மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது குடும்பத்துடன் ஓணம் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்! அதுல இதுதான் ஸ்பெஷலே.. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இறுதியாக அவரது நடிப்பில் உருவான பென்குயின் திரைப்படம் மும்மொழிகளிலும் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தற்போது குட்லக் சகி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரளா பெண்ணான கீர்த்தி சுரேஷும் தனது குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடினார். மேலும் ஸ்பெஷலாக தனது செல்ல நாய் குட்டிகளுக்கு பட்டு வேட்டி சட்டை அணிந்து மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.