திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட நடிகை கீர்த்தி சுரேஷா இது... பள்ளி சீருடையில் எப்படி உள்ளார் என்று பாருங்கள்!!
தமிழில் விஜய், ரஜினி, விஷால், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத, முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து இவர் நடித்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் மற்றும் ஜெயம் ரவியுடன் சைரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். தற்போது கீர்த்தியின் பள்ளி பருவ புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. பள்ளி சீருடையில் கீர்த்தியை பார்த்து ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.