மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடையாளம் தெரியா அளவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம்! இதோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு திரையுலகிலும் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
ரஜினி முருகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தனி ஒரு நடிகையாக இவர் நடித்த மஹாநடிகை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகிவருகிறார் கீர்த்தி. இந்நிலையில் அவர் அவரது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இது கீர்த்தி சுரேஷா என கேட்கும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் விதியசமாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.