மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தெரியுமா?? என்னை இப்படியெல்லாம் அழைக்கிறாங்க! இணையத்தை கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ!!
சமீப காலமாக ஆங்கில ஆல்பம் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் பெருமளவில் பிரபலமாகி வருகிறது. அந்த பாடலின் பொருள் எனது பெயர் இதுதான். ஆனால், என்னை இப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என்பதாம். இந்த நிலையில் நடிகைகள் சிலர் தனது உண்மையான பெயரையும், தாங்கள் படங்களில் நடித்த வெவ்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்களையும் தொகுத்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் இதனை போலவே அண்மையில் நடிகை சமந்தாவும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பல உச்ச பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷும் அசத்தலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தனது பெயர் கீர்த்தி சுரேஷ் எனவும், தன்னை இவ்வாறெல்லாம் அழைக்கிறார்கள் எனவும் கூறி தான் இதுவரை நடித்துள்ள பல படங்களின் வெவ்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்களையும், அப்படத்தில் அவர்களது பெயரையும் இணைத்து வீடியோவாக உருவாக்கி அதனை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது