மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவு பார்ட்டிகளுக்கு செல்லும் நடிகை கீர்த்தி சுரேஷ்! அதுவம் யாருடன் தெரியுமா? புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவருகிறார். தமிழில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் நடித்திருந்தார் கீர்த்திசுரேஷ்.
தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத ஹிந்தி படம் ஒன்றும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்திசுரேஷ். இதனால் அடிக்கடி மும்பை செல்லும் நடிகை கீர்த்திசுரேஷ் மும்பை கலாச்சாரத்திற்கு மாறிவருவதாகவும், அவ்வப்போது இரவு பார்ட்டிகளுக்கு செல்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிலும் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூருடன் கீர்த்திசுரேஷ் நன்கு பழகிவருவதாகவும், இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்துதான் பார்ட்டிக்கு செல்வதாகவும், அது சம்மந்தமான சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.