மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோயினா? வெளியே கசிந்த தகவல்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் யாத்தில் பேட்ட திரைப்படத்தில் நடித்துவருகிறார் ரஜினி. படத்தின் படப்பிடிப்புகள் முடிவு பெற்ற நிலையில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்ட படத்திற்கு பிறகு இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். சர்க்கார் படத்தில் கதை திருட்டு, அரசுக்கு எதிராக காட்சிகள் என முருகதாஸ் மீது பல சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் ரஜினியை வைத்து மீண்டும் அரசியல் சம்மந்தமான படத்தைதான் முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸ் இந்த படம் கண்டிப்பாக சர்கார் போன்று அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்காது என்று விளக்கமளித்தார்.
மேலும், இந்த படம் சூப்பர் ஸ்டார் படமாகத்தான் இருக்கும் என்றும் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் கூறியிருந்தார்.
ஆனால் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது பற்றி தகவல் எதுவம் வெளிவராத நிலையில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.