மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒத்து வராத கீர்த்தி சுரேஷ்! சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து அதிரடி நீக்கம்! இதான் காரணமா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான பேட்ட திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் வசூல் ரீதியாகவும் பேட்ட படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. பேட்ட படத்தை தொடர்ந்து இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார்.
கத்தி, சர்க்கார் என அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்துவரும் AR முருகதாஸ் தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளார். ஏற்கனவே ஒரு கதையை தயார் செய்து அதை முருகதாஸ் ரஜினியிடம் கூறியதாகவும், அந்த கதை பிடிக்காத ரஜினி வேறு கதை தயார் செய்யுமாறு முருகதாஸிடம் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
மேலும் படத்தின் பெயர் நாற்காலி என்றுகூட சொல்லப்பட்டது. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத அந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது.
தற்போது இயக்குனர் முருகதாஸ் வேறு கதை தயார் செய்துவிட்டதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், புதிய கதை கீர்த்தி சுரேஷுக்கு ஒத்து வராது என்பதால், கீர்த்தி சுரேஷுக்கு பதில் வேறொரு நடிகை தேர்வுசெய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.