மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கீர்த்தி சுரேசுக்கு உடம்பு ஏதும் சரி இல்லையா? புகைப்பட்டதால் அதிர்ச்சியான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் திரைப்படம் மூலம் பிரபலமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
ஆடல், பாடல், கவர்ச்சி இவற்றிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்தார் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் வெகுவாக பாராட்டினார்கள்.
நடிகையர் திலகம் படத்திற்காக சற்று எடை கூடிய கீர்த்தி சுரேஷ் அடுத்த ஒரு சில படங்களிலும் எடை கூடிய தோற்றத்திலேயே நடித்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் கீர்த்தி சுரேசை ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.
தளபதி விஜயுடன் நடித்த சர்க்கார் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் போனி கபூர் தயாரிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனால் தனது உடல் எடையை பாதியாக குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேசா இது? இவளோ ஒல்லியா மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.