6 வருட தவம்.. மாஸ் வெற்றிக்கு பின், கெட்டப்பை மாற்றிய யாஷ்.!



kgf-yash-cute-photo-viral

6 ஆண்டுகளுக்கு பின் நடிகர் யஷ், தனது தாடி, மீசையை எடுத்து கியூட்டாக சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஃப் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் கன்னட நடிகரான யஷ். இவர் இந்த படத்தின் மூலம் தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொண்ட நிலையில், தற்போது கேஜிஃப் 2 படமும் வெளியாகியுள்ளது.
 
இந்த படமானது ரசிகர்களை மிகவும் கவர்ந்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் யஷ் அடுத்தபடியாக தனது புதிய படத்திற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டுள்ளார். மேலும், அடுத்த படத்தில் நடிப்பதற்காக தனது நீண்ட தாடி மற்றும் தலை முடியை ட்ரிம் செய்து மிகுந்த க்யூட்டாக மாறியுள்ளார்.

yash

அத்துடன் யஷ் 6 ஆண்டுகளுக்கு பின், தான் வளர்த்து வைத்திருந்த தலைமுடி மற்றும் தாடியை ட்ரிம் செய்து புதிய கெட்டப்க்கு மாறியது ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.