மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹிந்தியில் ரீமேக்காகும் ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் திரைப்படம்! அதில் ஹீரோவாக நடிக்கப் போவது யார்னு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம்வரும் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கோமாளி. இத்திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கோமாளி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. அதனை தொடர்ந்து கோமாளி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். போனி கபூர் தமிழில் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தை தயாரித்துள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலினின் ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். இதனைத் தொடர்ந்து கோமாளி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார். ஹிந்தியில் ரீமேக்காகும் ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் ஹீரோவாக நடிகர் அர்ஜுன் கபூர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அர்ஜுன் கபூர், தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் ஆவார்.