மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ!! நடிகை குஷ்புக்கு என்ன ஆச்சு... வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் 80,90 ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. கொழு கொழுவென கியூட்டாக இருக்கும் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது.
குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர். தற்போது அவர் பல முன்னணி நடிகர்களின் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அரசியலில் கால் பதித்து வெற்றி நடை போட்டு வருகிறார்.
இந்நிலையில் குஷ்பு சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அய்யய்யோ நடிகை குஷ்புக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.