தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
மீண்டும் சொல்வதெல்லாம் உண்மையா.. சீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் கருத்து தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.?
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகையாகவும் பிரபலமான காணப்படுபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள்யாவும் தனித்துவமான கதைக்களத்தை கொண்டிருக்கும்.
மேலும் பிரபல தொலைக்காட்சி சேனலில் 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சி நடத்தி வந்தார். இந்நிகழ்ச்சியில் சாதாரண மக்களின் குடும்ப பிரச்சினைகளை பேசி தீர்வு கொடுத்து வந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதன்படி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீமான், விஜயலட்சுமி பிரச்சனையை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார். இவரின் பேச்சு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது, "விஜயலட்சுமி கேமிரா முன்பு இந்த பிரச்சனையை என்னிடம் சொன்னால் தீர்வு தர தயாராக உள்ளேன். ஆனால் தனிப்பட்டு என்னால் எந்த விதத்திலும் இதற்கு பதில் கூற முடியாது" என்று கூறியுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை ஆரம்பமா என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.