மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இங்கு பிச்சை எடுக்கும் தமிழர்களே.." கொச்சைப்படுத்திய நாயகியின் வைரலாகும் பழைய ட்வீட்.! புதிய சர்ச்சையில் லால் சலாம்..!!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இப்படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் கார்பன், ராஜா ராணி படத்தில் இவர் நடித்துள்ளது குறிபிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் இவர் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து பல வருடங்களுக்கு முன்பு ஐ.பி.எல். போட்டியின்போது ஆர்.சி.பி அணிக்கு ஆதரவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாடி தன்யா பாலகிருஷ்ணா போட்ட பதிவு இணையத்தில் வைரலானது.
அதில், "அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்துக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரத்துக்கு வந்து அதனை ஆக்கிரமித்து கொச்சைப் படுத்துகிறார்கள். டேய் உங்களுக்கு வெட்கமே இல்லையாடா?" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு அப்போது கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து இனி தமிழ் படங்களில் நான் நடிக்கமாட்டேன் என தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது 'லால் சலாம்' படத்தில் தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளது இணையத்தில் ரசிகர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழர்களை இழிவுப்படுத்திய இவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எப்படி வாய்ப்பு வழங்கலாம்? என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்போ அல்லது தன்யா பாலகிருஷ்ணா தரப்போ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.