மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அசினை தமிழ்த் திரையுலகம் கண்டுகொள்ளாதது ஏன் தெரியுமா!" வெளியான காரணம்!
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அசின், முதலில் மலையாள படத்தில் தான் அறிமுகமானார். இவர் நடிகையாகவும், பயிற்சி பெற்ற பரத நாட்டியக் கலைஞராகவும் அறியப்பட்டவர் ஆவார். தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக "எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி" படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து கஜினி, வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர், கஜினி ஹிந்திப் பதிப்பிலும் நடித்துள்ளார். இதன்மூலம் ஹிந்தியில் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார் அசின்.
மேலும் தெலுங்கிலும் ரவி தேஜா, நாகார்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஹிந்தியிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அங்கும் முன்னணியில் இருந்தார். கடைசியாக ஹிந்தியில் அவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் அவர் மீண்டும் தமிழுக்கு வர நினைத்தார்.
ஆனால் அப்போது அவருக்கு தமிழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈழத்தில் போர் நடந்து ஏராளமான தமிழர்கள் இறந்தபோது அசின் சல்மான் கானுடன் ஒரு படப்பிடிப்புக்காக அங்கு சென்றதே காரணம் என்று கூறப்படுகிறது. எனவே தான் அவர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டதாக கூறப்படுகிறது.