மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மு அபிராமி இப்போ என்ன செய்றாங்க தெரியுமா.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..
தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருபவர் அம்மு அபிராமி. இவர் 2017ம் ஆண்டு விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த "பைரவா" படத்தில் ஒரு மருத்துவ மாணவியாக நடித்திருந்தார். தொடர்ந்து ராட்சசன், அசுரன் ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்.
முன்னதாக அம்மு அபிராமி, "என் ஆளோட செருப்பைக் காணோம்', தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அம்மு அபிராமி.
இந்நிலையில், இவர் தற்போது கண்ணகி, நிறங்கள் மூன்று, யார் இவர்கள், கனவு மெய்ப்பட, குதூகலம், பெண்டுலம் உட்பட ஏழு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்துள்ள "ஜிகிரி தோஸ்த்" திரைப்படம் டிசம்பரில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை ஷங்கரின் உதவி இயக்குனர் அறன் இயக்குகிறார். மேலும் இப்படத்தை தயாரிப்பதுடன் முக்கிய வேடத்திலும் நடிக்கிறார் அறன். வி. ஜெ. ஆஷிக், பவித்ரா லட்சுமி, அனுபமா குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் "சோலி சோடா 1.5" என்ற வெப் தொடரிலும் அம்மு அபிராமி நடித்து வருகிறார்.