"தலைவர் படத்திற்காக முன்னணி இயக்குனர்களுடன் விவாதிக்கும் லோகி!"



Latest update for thalaivar movie

2017ம் ஆண்டு "மாநகரம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடந்த மாதம் வெளியான "லியோ" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

Lokesh

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக விஜயுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ், படத்தின் திரைக்கதையில் சொதப்பியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் இரண்டாம் பகுதி திருப்திகரமாக இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.

லியோ திரைப்படம் இதுவரை 541கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ள நிலையில், விமர்சன ரீதியாக அதிருப்தியைப் பெற்றுள்ளதால், தனது அடுத்த படத்தில் இத்தகைய தவறு நடக்க கூடாது என்று லோகேஷ் கனகராஜ் கவனமாக இருக்கிறாராம்.

Lokesh

லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தை தலைவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கவுள்ளார். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அதற்காக பல முன்னணி இயக்குனர்களுடன் திரைக்கதை குறித்து விவாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.