மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடந்தது இதுதான்! பிரபல சன்டிவி சீரியலிருந்து விலகும் மகள்! உண்மையை போட்டுடைத்த நடிகர் லிவிங்ஸ்டன்!
சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே உனக்காக. இந்த தொடரில்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் ஜோவிட்டா. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகளாவார்.
இவர் ஏற்கனவே நடிகை அம்பிகாவின் மகன் ராம்கி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையிலேயே அவர் பூவே உனக்காக சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் ஜோவிட்டா அந்த தொடரில் இருந்து திடீரென விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கான காரணம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து லிவிங்ஸ்டன், பூவே உனக்காக சீரியலில் இருந்து ஜோவிட்டா விலகியது நாங்களே எடுத்த முடிவு. அவரை யாரும் சீரியலிலிருந்து விலக்கவில்லை. நடிக்கத் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே இப்படியொரு முடிவை எடுத்தது ரொம்ப வருத்தமாகதான் உள்ளது. ஆனால் அதற்கு நிறைய காரணம் இருக்கிறது. அதை இப்போது சொல்லி யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. டிசம்பர் 15ல் எனது மகள் ஜோவிட்டா சீரியலிலிருந்து விலகுகிறார். மேலும் அதன்பிறகு தேவைப்பட்டால் காரணத்தை சொல்கிறோம் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.