மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமூக வலைத்தளங்களிலிருந்து விலக போகும் லோகேஷ்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். லோகேஷ் சினிமடிக் யுனிவர்ஸ் என்று புதுவிதமாக திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களான மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம் போன்றவை மிகப்பெரும் வெற்றியடைந்தன. சமீபத்தில் இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் திரையரங்கில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.
இதனையடுத்து அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்குவதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார் லோகேஷ். மேலும் சமீபத்தில் கலந்து கொண்ட இன்டர்வியூவில் குறிப்பிட்டு பத்து படங்களை மட்டுமே இயக்குவேன் என்று கூறிய விஷயம் இவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் தலைவர்171 திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த வருடம் தொடங்கும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை தொடங்க உள்ளதால் சமூக வலைதளங்களில் இருந்து 6 மாதங்களுக்கு விலக போவதாக அறிவித்துள்ளார்.