மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. என்னம்மா இது.! தலைகீழாக லாஸ்லியா செய்த காரியத்தை பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவுநாயகியாக வலம் வருபவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பிக்பாஸ் வீட்டில் தனது சிரிப்பால், கலகலப்பான பேச்சால் அனைவரின் உள்ளங்களையும் அவர் கொள்ளை கொண்டார்.
அதனை தொடர்ந்து பெரும் ஆர்மியை கொண்டிருந்த லாஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் படவாய்ப்புகளும் கிடைத்தது. அவர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் உடன் இணைந்து பிரெண்ட்ஷிப் படத்தில் நடித்தார். பின் பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்திருந்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ககளை கவர்ந்து வருகிறார். அவர் தற்போது உடலை வளைத்து, தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.