மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பல சின்னத்திரை பிரபலங்களையும் பின்னுக்கு தள்ளி பிக்பாஸ் லாஸ்லியா படைத்த சாதனை! உற்சாகத்தில் கொண்டாடும் ரசிகர்கள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3ல் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் லாஸ்லியா. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்பட்டாளமும், ஆர்மியும் உருவானது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு சிறு சலசலப்பும், சர்ச்சையும் கிளம்பியது. போட்டியில் தனது கவனத்தை செலுத்தி மூன்றாம் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் இதனையடுத்து ஒரு ஆங்கில நாளிதழ் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு மக்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர்களுக்கான கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும், லட்சுமி ஸ்டோர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார்.இரண்டாம் இடத்தை பல சின்னத்திரை பிரபலங்களையும் பின்னுக்கு தள்ளி பிக்பாஸ் லாஸ்லியா பிடித்துள்ளார்.
அவரை தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா 3வது இடத்திலும், பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி 4வது இடத்திலும், பிக்பாஸ் 3 புகழ் சாக்ஷி அகர்வால் 5வது இடத்திலும் உள்ளனர்.
அவர்களை தொடர்ந்து நடிகர் சாந்தனுவின் மனைவி தொகுப்பாளினி கீர்த்தி 6வது இடத்திலும், பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் 7வது இடத்திலும், திருமணம் புகழ் ஸ்ரேயா 8வது இடத்திலும் உள்ளனர். மேலும் விஜே சித்ரா 9வது இடத்திலும், பொன்மகள் வந்தாள் புகழ் ஆயிஷா 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.