மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கம்பி எண்ணும் கணவர்.. போட்டோ ஷூட் நடத்தும் மனைவி.? ரவீந்தர் மகாலட்சுமி வைரல் போட்டோஸ்.!
தமிழ் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி, யாமிருக்க பயமேன், அரசி, பிள்ளை நிலா, அன்பே வா உள்ளிட்ட தமிழ் தொலைகாட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்துள்ளார் மகாலட்சுமி.
மேலும், லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் ரவீந்தர். இவரும் , மகாலட்சுமியும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். அப்போதிலிருந்து இவர்களது திருமணம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தனது முதல் திருமண நாளை கொண்டாடினர் இந்த ஜோடி. அதன் பிறகு, 16கோடி பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் ரவீந்தர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில், ரவீந்தர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஏராளமான பாலோயர்களை கொண்டுள்ள மஹாலட்சுமி, தற்போது பட்டுப்புடவை மற்றும் நகைகள் அணிந்து புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், "கணவர் கம்பி எண்ணும் கவலை இல்லாமல், இந்த போட்டோஷூட் எதற்கு?" என்று கேட்டு வருகின்றனர்.