மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி 65 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்! அட.. யார்னு பார்த்தீங்களா!! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனான தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகியப் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். அவர்களுடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தளபதி 65 படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
Malayalam actor #ShineTomChako on board #Thalapathay65 pic.twitter.com/LPo7xATnad
— Haricharan Pudipeddi (@pudiharicharan) May 5, 2021
மேலும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்தவுடன், சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.