மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: 8 மாத கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் காலமானார்; உயிருக்கு ஊசலாடும் பச்சிளம் பிஞ்சு..!
மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்த வந்தவர் பிரியா (வயது 35). இவர் மருத்துவரும் ஆவார். கேரளாவில் ஒளிபரப்பாகிய கருத்தமுத்து நெடுந்தொடரில் நடித்து நடிகை ப்ரியா பிரபலமானார்.
இவர் தனது கணவர் நன்னாவுடன் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். தற்போது 8 மாத கர்ப்பமாகவும் இருந்தார்.
திருமணத்திற்கு பின்னர் தொடர்களில் நடிப்பதை குறைந்துகொண்ட நிலையில், கர்ப்பமானதால் நடிப்பை சற்று கைவிட்டு இருந்தார்.
இந்நிலையில், 8 மாத கர்ப்பிணியான மருத்துவர் பிரியா, மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் குழந்தை மருத்துவர்களால் அறுவை சிகிச்சை முறையில் மீட்கப்பட்டு, ஐ.சி.யுவில் உள்ளது.
கர்ப்பிணி நடிகையின் மறைவு கேரளா திரையுலகினரை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், 35 வயதாகும் இளம் பெண் என்பதால், அவரின் மாரடைப்புக்கு காரணம் என்ன? எனவும் கேள்வி எழுந்துள்ளது.
மாரடைப்பு சமீப ஆண்டுகளாக இளம் தலைமுறைக்கு ஏற்படும் நோயாகிவிட்டது. உடல்நலனை சரியாக பரிசோதித்து கவனமாக இருந்த கர்ப்பிணி நடிகை, மருத்துவருக்கே இந்நிலை எனில் சாமானியனின் நிலை கேள்விக்குறிதான்.