தல தரிசனத்திற்கு தயாராகும் கேரளத்து அஜித் ரசிகர்கள்; பில்லா ரீ-ரிலீஸ் கொண்டாட்டம்.. என்று தெரியுமா?.!



Malaiyalam Print of Billa 2007 Movie Re release In Kerala 

 

கடந்த 2007ம் ஆண்டு அஜித் குமார் (Ajith Kumar), நயன்தாரா, நமிதா, பிரபு, ரஹ்மான், ஆதித்யா, சந்தானம் (Santhanam) உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பில்லா. இப்படம் கடந்த 1980ல் ரஜினியின் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தின் மறுஉருவாக்கம் ஆகும். 

ரஜினியின் பில்லா திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை ஈடு செய்யும் வகையில், அஜித்தின் பில்லாவுக்கும் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. எம்.எஸ் விஸ்வநாதன் இசை, யுவனால் 2007ல் மெருகூட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மலையாள மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள பில்லா திரைப்படம், மே 10 ம் தேதி கேரளா மாநிலத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படம் 2007 ல் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து, மீண்டும் தற்போது வெளியாகிறது. தமிழ்நாடு-கேரளா எல்லையில் இருக்கும் அஜித் ரசிகர்கள் பலரும் இதற்காகவே கேரளா செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.