கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"எல்லாமே பணத்துக்காகவா... " காதலனை கொன்ற கள்ளக்காதலியின் வார்த்தை.!! ஆட்டோ டிரைவர் தற்கொலை.!!
திருச்சியில் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக கள்ளக்காதலி திட்டியதில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இறந்த நபரின் கள்ளக்காதலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலமாக கிடந்த ஆட்டோ டிரைவர்
திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மனோகர்(43). கடந்த சனிக்கிழமை மனோகர் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
பள்ளி தோழியியுடன் கள்ளக்காதல்
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் மனோகருக்கு, அவரது பள்ளி தோழியான சுதா(35) என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சுதாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் மனோகர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தை படுகொலை... முறை தவறிய உறவால் விபரீதம்.!! காதலானுக்கு வலை வீச்சு.!!
கைது செய்யப்பட்ட சுதா
இது தொடர்பாக காவல்துறையிடம் சுதா அளித்த வாக்குமூலத்தில் தனக்கும் மனோகருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் சுதாகர் தனக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அவரை மோசமாக திட்டியதால் மனம் உடைந்த சுதாகர் தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக சுதா மற்றும் அவருக்கு உதவி செய்தவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: "ஏண்டி லேட்டா வந்த.. " மகளின் உயிரை பறித்த கேள்வி.!! 20 வயது மாணவி தற்கொலை.!!