மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. இதுவே முதன்முறை.! சிம்பு படைத்த மாபெரும் அசத்தல் சாதனை! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக முன்னேறி வரும் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக, ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.
மாநாடு திரைப்படத்தில் அவர்களுடன் இணைந்து பிரேம் ஜி, டேனியல் போப், கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
மாநாடு திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் ட்ரைலர் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாநாடு ட்ரைலர் யூடியூபில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. சிம்பு நடித்த படத்தின் ட்ரைலர் ஒரு கோடி பார்வையாளர்களைப் பெறுவது இதுவே முதல் முறை. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.