மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயயோ.. என்னாச்சு! குக் வித் கோமாளி மணிமேகலைக்கு ஏற்பட்ட விபத்து! சோகத்தில் ரசிகர்கள்!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து தனது கலகலப்பான பேச்சால் மற்றும் சிரிப்பால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவர் மணிமேகலை. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தற்போது சிறந்த ஜோடியாகவும் வலம் வருகின்றனர்.
மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார். அதனை தொடர்ந்து அவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரகளை செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்து வருகிறார். இந்த நிலையில் மணிமேகலை தான் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில், “ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. எனக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது நலமாக இருக்கிறேன். அடுத்த இரு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன். நிச்சயம் எனது குழுவை மிஸ் செய்வேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் அதில் முக்கிய குறிப்பு- சுடு தண்ணி தூக்கும் போது பாத்து தூக்குங்க எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சுடு தண்ணி தூக்கும் போது பாத்திரம் தவறி விழுந்து மணிமேகலைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.