மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாணியில் விழுந்த மணிமேகலை! ஆவேசத்துடன் எடுத்த சவால்! லைக்ஸ்களை அள்ளும் வீடியோ!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தனது கலகலப்பான பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் மணிமேகலை. அதனை தொடர்ந்து மணிமேகலை, நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து, குடும்பத்தினரை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் தற்போது அழகிய, சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர்.
மேலும் சமீபகாலமாக மணிமேகலை விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனோவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து திரை பிரபலங்களும் தங்களது வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதேபோல் மணிமேகலையும் அவரது கணவருடன் கிராமமொன்றில், நேரத்தை செலவிட்டு வருகிறார். அப்பொழுது தன் வீட்டை சுற்றி உள்ளவர்களிடம் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் மணிமேகலை சிறுமி ஒருவருடன், சுத்தி விளையாடும்போது கைதவறி சாணியில் போய் விழுந்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு என்னவொரு வில்லத்தனம், சாணியில் தள்ளிவிட்டுட்டாங்க.. அடுத்த கேமில் ரிவெஞ்ச் எடுக்கணும் என கிண்டலாக சவால் விடுத்து பதிவிட்டுள்ளார்.