மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மன்சூர் அலி கானுக்கு முன் ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.! இனி என்ன நடக்கும்.?
பிரபல நடிகரான மன்சூர் அலிகான் லியோ திரைப்படத்தில் பெட்ரூம் காட்சிகள் மிஸ் ஆகிவிட்டது, ரோஜா மற்றும் குஷ்பூவை பெட்டில் போட்டதை போல திரிஷாவை போட முடியவில்லை என்று இரட்டை அர்த்தத்தில் பேசினார்.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து, இதற்கு பதிலளித்த நடிகை திரிஷா என்னைப் பற்றி மன்சூர் அலிகான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களின் மூலமாக என்னுடைய கவனத்திற்கு வந்தது. பாலியல், மோசமான ரசனை ஆகியவற்றை இதில் நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான், மன்சூர் அலிகான் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவுமில்லை, மன்னிப்பு கேட்கவுமில்லை. இதனை தொடர்ந்து, அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354 ஏ, 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஆகவே ,நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.