மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் மன்சூர் அலிகானின் மனைவி மீது கொலைவெறி தாக்குதல்!. ரத்த காயங்களுடன் அவர் கூறும் பரபரப்பு புகார்!.
சினிமாத்துறையில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரமாண்ட நடிகர் என பெயரெடுத்த நடிகர் மன்சூர் அலிகான், சென்னை நுங்கம்பாக்கத்தில் மனைவிகள் மற்றும் குழந்தைகளோடு கூட்டுக் குடும்பமாக வசித்துவருகிறார்.
நடிகர் மன்சூர் அலிகானுக்கு மூன்று மனைவிகள் என கூறப்படுகிறது. இவர்கள் வீட்டில் திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்ப சண்டையில் கைகலப்பு ஏற்பட்டு அடிதடி தகராறு நடந்துள்ளது.
இந்த நிலையில் அவரின் இரண்டாவது மனைவி ஹமீதாவின் மகள் லைலா அலிகான் மற்றும் அவரது மகன் மகன் மீரான் ஆகியோர் மன்சூர் அலிகானின் 3-ஆவது மனைவி வஹிதாவை இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வஹிதா, ரத்தக் காயத்துடன் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தன் மீது தாக்குதல் நடக்கும் போது, கணவன் மன்சூர்அலிகான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
எனவே மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா அலிகான் மற்றும் மீரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.