மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நடிகர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கடைசியாக வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். .
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்தத் திரைப்படம் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்தை பா ரஞ்சித் மற்றும் நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.