மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவர் இறந்த துக்கத்திலிருந்து மீண்டுவரும் மீனா.. தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..! வைரலாகும் அசத்தல் வீடியோ..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், கமல், விஜய், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் பிரபு உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார்.
அத்துடன் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்திவந்த மீனா, இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு கணினி பொறியாளரான வித்தியாசாகர் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதியன்று மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் காலமானார்.
இதனால் மிகவும் மனமுடைந்துபோன மீனா கணவர் இறந்து இரண்டு மாதங்களுக்கும் மேலான நிலையில், மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வருவதாக தெரிகிறது. அத்துடன் சங்கவி, ரம்பா, சங்கீதா ஆகியோர் குடும்பமாக வந்து மீனா மற்றும் நைனிகாவை சந்தித்துள்ளனர்.
மேலும், தொழிலதிபர் ரேணுகா பிரவீன் மற்றும் கீது நாயுடு ஆகியோருடன் தனது 46-வது பிறந்தநாளை நடிகை மீனா கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.