மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன் ரிலீஸ் இப்போ இல்லையா? ஏன் என்னாச்சு? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!!
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்.ஜி.ஆர் மகன். இத்திரைப்படத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் எம்ஜிஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் இடையில் சற்று குறைந்து இருந்தநிலையில் தற்போது இரண்டாவது அலையாக மீண்டும் தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் திரையரங்குகளிலும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.