மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மணிரத்னம் இருட்டில் படம் எடுப்பவர் பொன்னியின் செல்வன் படம் பார்க்க விருப்பம் இல்லை " அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சை பேச்சு.?
கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய மைல்கல்லாக இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். வரலாற்று திரைபடமாக எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கிய இப்படத்தை மதராசு டாக்கீஸ், லைகா தயாரிப்பு போன்ற நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், கார்த்திக், விக்ரம், திரிஷா, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமானின் இசை பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற முக்கிய காரணமாகிருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகபெரிய ஹிட்டாகியுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் சில மாதங்களில் வெளிவர தயாராகி கொண்டிருக்கிறது.
இதுபோன்ற நிலையில், அமைச்சர் துரைமுருகன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; "மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவிருக்கிறார் என்று தெரிந்ததும் அவர் இருட்டில் படம் எடுப்பவர் இந்த படம் எப்பிடி இருக்குமோ என்று நினைத்தேன். படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.