மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
36 வருஷங்களுக்கு பிறகு மீண்டும் உருவாகும் சூப்பர்ஹிட் திரைப்படம்! ஹீரோ,ஹீரோயின் இவர்களா? செம அட்டகாசமான தகவல் இதோ!
1983-ம் ஆண்டு ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில், பாக்யராஜ் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் முந்தானை முடிச்சு. இந்தப் படம் அப்பொழுது வெளியாகி நூறு நாட்களுக்கும் மேல் ஓடி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த வெற்றிப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
இப்படத்தில் நடிகை ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், கே.கே.சௌந்தர், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெற்றியைத் தொடர்ந்து இந்தி,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு திரைப்படம் மீண்டும் ரீமேக் செய்யப்பட உள்ளது. பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடிக்கவுள்ளார். மேலும் ஊர்வசி நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். ஜே.பி. எஸ் சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது