மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி! குவியும் லைக்ஸ்
முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மைனா நந்தினி.
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம பலரில் ஒருவர் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி தொடரில் இவர் நடித்த மைனா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அன்றில் இருந்து மைனா நந்தினி எனவே அடையாளம் காணப்படுகிறார்.
சீரியல்களில் நடித்துவந்த இவர் ரோமியோ ஜூலியட், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி சீரியல், சினிமா என பிஸியாக இருந்த இவர் கடந்த வருடம் பிரபல சீரியல் நடிகர் லோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது குழந்தையின் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த மைனா தற்போது முதல் முறையாக தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவிற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவித்துவருகிறது...