மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாற்றியமைக்கப்பட்டது நேர் கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி-எப்பொழுது தொரியுமா?
அஜித் நடித்து போனிகபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கி உள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருக்கிறார். பிங்க் படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து ரீமேக் செய்திருக்கிறார்.
இவர்களுடன் ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, நேர் கொண்ட பார்வை படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்தது.
இந்நிலையில் வருகிற ஆகஸ்டு 10 - ம் தேதி, இந்த படம் திரைக்கு வரும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, நேர் கொண்ட பார்வை திரைப்படத்தை, ஆகஸ்டு 1 - ம் தேதியே திரைக்கு கொண்டு வர, படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.