மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமந்தாவா? சாய் பல்லவியா? உங்களுக்கு பெஸ்ட் ஜோடி யாரு? நாகசைதன்யா சொன்ன பதிலை பார்த்தீங்களா!!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரும் நடிகை சமந்தாவும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் அவரவர் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா விக்ரம் குமார் இயக்கத்தில் நடித்த தேங்க்யூ திரைப்படம் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் நாக சைதன்யா படத்தின் பிரமோஷனில் கலந்துகொண்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
( #SamanthaRuthPrabhu & me ) we had the best love stories together onscreen -
— Madhu (@themadhuin) July 21, 2022
#NagaChaitanya in an interview for #ThankYouMovie @Samanthaprabhu2 @chay_akkineni pic.twitter.com/xppqDrAPxQ
அதில் அவரிடம் உங்களது பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் ஜோடி யார்? என கேள்வியெழுப்பபட்டுள்ளது. அதற்கு நாகசைதன்யா, சாய்பல்லவி மற்றும் சமந்தா இருவருடனுமே காதல் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துள்ளேன். இருவருமே எனக்கு பெஸ்ட் ஆன்ஸ்கீரின் ஜோடிதான். சாய் பல்லவியுடன் லவ் ஸ்டோரி படத்தில் நடித்திருந்தேன். எங்களுடைய ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. மேலும் சாம் உடன் சில அழகான காதல் கதைகளில் நடித்திருக்கிறேன். சமந்தாவுடன் திரையில் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.