மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம்பருத்தி சீரியலில் அதிரடியாக புதிய என்ட்ரி கொடுத்த பிரபல முன்னணி நடிகை! யார்னு பார்த்தீர்களா!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, செம்ம ஹிட்டாகி ஒளிபரப்பாகி வரும் தொடர் செம்பருத்தி. இத்தொடருக்கு என இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இத்தொடரில் துவக்கத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதியாக ஷபானா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இந்நிலையில் திடீரென கார்த்திக் ராஜ் ஒரு சில காரணங்களால் அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில்
தற்போது அகினி என்பவர் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரசிகர்களை கவர்ந்து, டிஆர்பிலும் சாதனை படைத்த செம்பருத்தி சீரியலில் தற்போது புதிய என்ட்ரியாக பிரபல முன்னணி நடிகை நளினி களமிறங்கியுள்ளார். அதாவது அவர் டாக்டர் கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.