தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நளினிக்காக சரமாரியாக அடிவாங்கிய ராமராஜன்.! எனக்கு அவரை இப்பவும் ரொம்ப பிடிக்கும்.! எங்கள் காதல் உண்மையானது.! மனம் திறந்த நளினி
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஜொலித்தவர் ராமராஜன். 1980களில் தமிழ் சினிமாவில் கலக்கியவர் இவர் தான். இவரது கரகாட்டக்காரனை யாராவது மறக்க முடியுமா? இவர் படங்களில் எவ்வித ஆபாசமான காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இடம்பெறாது என்பதால் தாய்க்குலங்கள் இவரது படத்தைக் காண ஆவலுடன் திரையரங்கிற்கு வருவார்கள்.
ராமராஜன் நடிகை நளினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்திற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி. இந்நிலையில் தங்களது திருமணம் குறித்தும், விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை நளினி.
அவர் பேசுகையில், நான் நடிக்க வந்த போது உதவி இயக்குனராக ராமராஜன் பணியாற்றினார், அவர் ஒருதலையாக என்னை காதலித்து வந்துள்ளார். படப்பிடிப்புக்கு இடையில் எனக்கு காதல் கடிதங்கள் கொடுப்பார், ஒருநாள் ஆடை அணிந்து வந்த போது, இது நன்றாக இருக்கிறது, நாளைக்கும் போட்டுட்டு வாங்க என்று கூறினார். ஏதேச்சையாக நான் அதையே போட்டுக்கொண்டுவர, அவரது காதல் மேலும் அதிகரித்துவிட்டது.
நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் ஹீரோவாக அவர் நடித்த போது, என்னிடம் காதலை சொல்வதற்காக ஒய்எம்சிஏ-விற்கு வருகிறார். அப்போது அவர் என்னிடம் பேசுவதை பார்த்துவிட்டு, என்னுடன் வந்தவர் என் வீ்ட்டிற்கு போன் செய்து சொல்லிவிட்டார். உடனடியாக அங்கு வந்த எங்கள் வீட்டார், ராமராஜனை அடித்து துவைத்துவிட்டனர், அப்போது தான் பரிதாபப்பட்டு, அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்.
அதன்பின்னர் மலையாள படங்களில் நடிப்பதற்காக சென்றுவிட்டேன், ஒரு வருடம் சென்னைக்கே வரவில்லை. பாலைவன ரோஜாக்கள் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தாய் விருது எனக்கும், சிறந்த புதுமுக நடிகருக்கான விருது ராமராஜனுக்கும் கொடுத்தார்கள்.
அப்போது தான் மீண்டும் அவரை பார்த்தேன், எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். அப்போது 6-வது குறுக்குத்தெரு என்ற ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த படத்தில் நடித்த பாண்டியன் மதுரை என்பதால் அவரை வைத்து பேசி அப்படியே கல்யாணம் பண்ணதுதான். கடந்த 1987-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முன்னிலையில் எங்களுக்கு திருமணம் நடந்தது. திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருந்தாலும், நாங்கள் பிரிந்துவிடுவோம் என எங்களுக்கு தெரிந்துவிட்டது, இதனால் சமரசமாக 2000ம் ஆண்டு பிரிந்துவிட்டோம்.
இவர்களுக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கின்றனர், இப்போதும் நாங்கள் நண்பர்கள் தான், அவருக்கு கல்யாணத்திற்கு முன்பு காதல் என்றால், எனக்கு கல்யாணத்திற்கு பின்பு தான் காதல் வந்தது. அவர் ரொம்ப வெகுளியானவர், நல்ல மனிதர், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருக்கு உடம்பு சரியில்ல என்று பல வதந்திகள் பரவி வருகிறது. அதெல்லாம் எதுவுமே இல்ல அவர் நலமுடன் இருக்கிறார். எங்கள் காதல் உண்மையானது என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.